இன்றைய வசனம்
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்.
- கொலோசெயர் 1:27-28

Adimai naan aandavare lyrics

அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே - என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
1.என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
2.உலக இன்பமெல்லாம் - நான்
உதறித் தள்ளி விட்டேன்
3.பெருமை செல்வமெல்லாம் - இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4.வாழ்வது நானல்ல - என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்
5.என் பாவம் மன்னித்தருளும் - உம்
இரத்தத்தால் கழுவிவிடும்
6.முள்முடி எனக்காக - ஐயா
கசையடி எனக்காக
7.என் பாவம் சுமந்து கொண்டீர் - என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்


No comments:

Post a Comment

Newerpost Older post Home