இன்றைய வசனம்
நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.
- ரோமர் 15:5-6

Yentha kaalathilum tamil christian song lyrics

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
பல்லவி

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
சரணங்கள்
1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நேரே ---எந்த
2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே --- எந்த
3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே --- எந்த
5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர் --- எந்த
6. ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே --- எந்த
7. ஞானமும் நீரே - தானமும் நீரே
நியாமமும் நேரே - என் நாதனும் நீரே ---- எந்த
8. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே
ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே --- எந்த
9. மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே --- எந்த
10. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே --- எந்த


No comments:

Post a Comment

Newerpost Older post Home